Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிம்ம ... மகாவிஷ்ணு கற்சிலை பாலாற்றில் கண்டெடுப்பு மகாவிஷ்ணு கற்சிலை பாலாற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நீலகிரியில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2026
01:08

நீலகிரி ; ‘ஆடி வெள்ளியில் அம்மன் கோவில்களில் நடந்த வழிபாடுகளில், மழை பொழிந்து, நோய் நொடிகள் அகன்று, தொழில் வளம் பெருக வேண்டும்,’ என, பிரார்த்தனை செய்யப்பட்டது. ‘எல் நினோ’ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம், மழை, வறட்சி ஆகியவை ஏற்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் போதிய பருவமழை பெய்யாத காரணத்தால், உள்ள அணைகளில் தண்ணிர் குறைய துவங்கி உள்ளது. இதனால், மின் உற்பத்தி பாதிப்பு; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மறுபுறம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி, ஆடி வெள்ளியான நேற்று, ஊட்டி மாரியம்மன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள்; வழிபாடுகள் நடந்தது. குன்னுார் வி.பி.,தெரு சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, மேளதாள முழக்கத்துடன் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், அம்மன் தேர் பவனியுடன், தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு புனித மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


ஐந்தாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, கோவை வடக்கு மாவட்ட இந்து வியாபாரிகள் நல சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். தங்காடு சக்திபீடம் சுவாமி முக்தானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர். மழை பொழிந்து, நோய் நொடிகள் அகன்று, தொழில் வளம் பெருக பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, குன்னுார் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதேபோல, மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, மழை வர வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். –நிருபர் குழு– 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar