Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் எழுந்தருளிய ... சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை சங்கரலிங்கர் சுவாமி சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் சண்முகநாதர் தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் சண்முகநாதர் தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2026
03:08

மயிலாடுதுறை; குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொட்டும் மழையில் நடைபெற்ற வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் தெப்ப உற்சவம். தெப்பத்தின் மீது தூண்கள், தோரணங்கள் சுதை வடிவில் சுவாமிகளுடன் மண்டப வடிவில் அமைக்கப்பட்ட தெப்பம் பக்தர்களை கவர்ந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்:-

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தளமாகவும் திருமண தடை நீங்கும் தலமான இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் தீர்த்தகுளத்தில் தெப்பத்தின் மீது தூண்கள், தோரணங்கள் சுதை வடிவில் சுவாமிகளுடன் மண்டப வடிவில் மின்னோளியில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்த தெப்பத்தில் வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாதீபாரதனை செய்யப்பட்டது. அப்பொது திடீர் என பெய்த கொட்டும் மழையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 5 முறை தீர்த்த குளத்தில் வலம் வந்தது.   இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தெப்ப உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar