Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

08 ஆக
2026
04:08

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை நடந்தது. 


கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலை கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் சித்தம் அழகியார் உழவார் திருக்கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி இணைந்து லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடத்தினர். விழுப்புரம் ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் பூஜையை துவக்கி வைத்தார். சித்தம் அழகியார் உழவார் திருக்கூட்ட அமைப்பாளர் வேலாயுதம் தமிழில் மந்திரங்கள் வாசித்து வழிபாடுகளை நடத்தினர். பாலக்காடு சாந்தி தீபம் ஆஷ்ரம சிவனடியார் ஸ்ரீகண்டேஷ்வரன் சுவாமி ஆசியுரை வழங்கினார். 


நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை டாக்டர்கள் பாபுசக்கரவர்த்தி, இந்துபாலா தலைமை தாங்கினர். ஆரிய வைசிய சங்க துணை தலைவர் பெருமாள், உஷா பட்டு மாளிகை உரிமையாளர் ஹேமலதா, கமலா பல்ப் சென்டர் உரிமையாளர்கள் வைத்திலிங்கம், சுதா, கிருஷ்ணா மெட்டல்ஸ் உரிமையாளர்கள் ராம்ராஜ், ஜெயக்கமலா, ஜெயலட்சுமி ஓட்டல் உரிமையாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர். இசை ஆசிரியர் ராஜலட்சுமி திருவாசகம், தேவாரம் பாடலிசை நடத்தினார். திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பூஜைக்கான பொருட்கள், அன்னதானம் ஆகியன கோவில் சார்பில் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் அடிகளார், ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் செய்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை;  ஆடி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
மானாமதுரை: திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே கருங்குளத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் ... மேலும்
 
temple news
 சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது.சிவகங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொட்டும் மழையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar