ஆடி அமாவாசை; திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குவிந்த மக்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2026 03:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.
அமாவாசை தினங்களில் இறந்த முன்னோர்களுக்கு சரவணப் பொய்கையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமானோர் வந்தனர். ஒருமணி நேரம் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர். கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.