Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாளை.யில் புகழ் பெற்ற தசரா திருவிழா ... மழை வேண்டி சிறப்பு பூஜை மழை வேண்டி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவ பாஷாணம் கோயில் சேதுக்கரையில் மகாளய அமாவாசை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவ பாஷாணம் கோயில் சேதுக்கரையில் மகாளய அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

11 அக்
2026
11:10

தேவிபட்டினம்: புரட்டாசி மகாளய அமாவாசையில் தேவிபட்டினம் நவபாஷாணம் கோயில், சேதுக்கரை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கடலில் புனித நீராடிய பக்தர்கள், நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நவபாஷாணம் கடற்கரை எதிரே உள்ள விநாயகர் கோயில் மற்றும் கடலடைத்த பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கான ஏற்பாடுகளைச் நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

*திருப்புல்லாணி அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள், மக்கள் கடலில் புனித நீராடினர். நேற்று அதிகாலை 3:30 முதல் மதியம் 3:00 மணி வரை தொடர்ந்து கடலில் புனித நீராடினர். முன்னோர்களை நினைத்து திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் செய்தனர்.

சேதுக்கரை அருகே உள்ள வெள்ளை பிள்ளையார் மற்றும் அகத்தியர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். சிதறு தேங்காய் உடைத்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர். மதிய உணவிற்கு முன்னதாக காகங்களுக்கு அன்னமிட்டனர். இதே போன்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் காலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. அருகே உள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடி சங்கல்ப பூஜைகளை செய்தனர்.

*தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ராமபிரான் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் வழிபட்ட தலங்களில் ஒன்றாகக் தீர்த்தாண்டதானம் கருதப்படுகிறது. ராமபிரான் தன் தந்தை தசரதருக்குத் திதி கொடுக்க நினைத்த போது, அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கே தீர்த்தமாக உருவெடுத்ததாக ஐதீகம். இதனாலேயே இந்த ஊர் தீர்த்தாண்டதானம் (தீர்த்தங்கள் ஆடிய தானம்) என்று அழைக்கப்படுகிறது.

நேற்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதனை தொடர்ந்து அங்குள்ள சர்வ தீர்த்தேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar