ஆடி வெள்ளி: கிணத்துக்கடவு வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2026 10:08
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி நாளான இன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர். இறுதியில், பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில், மாமாங்கம் பத்திரகாளி அம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.