முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2026 05:08
கமுதி: கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை,பூர்ணாஹீதி நடந்தது. முத்துமாரியம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது.இதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் ஓம் சக்தி வடிவில் 1008 சங்காபிஷேகம் வைத்து சிறப்புபூஜையில் வழிபட்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.