Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம், ஆடி ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு வளை காப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடத்தில் பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்கள்; அம்மனுக்கு சீர்‌ எடுத்து வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடத்தில் பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்கள்; அம்மனுக்கு சீர்‌ எடுத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
05:08

பல்லடம்: பல்லடத்தில், பாரம்பரியத்தை பின்பற்றி, பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து வழிபட்டனர்.


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில், பெண்கள், தாய்மார்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமையான இன்று பல்லடம், பனப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், பாரம்பரியத்தை பின்பற்றி, சீர் வரிசைகள் எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர்.


இது குறித்து பெண்கள் கூறியதாவது:; ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிப்பூர நாளில், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். முன்னோர்கள் அறிவுறுத்தியதன்படி, இச்சடங்குகளை செய்து வருகிறோம். முன்னதாக, ஒவ்வொரு வீட்டில் இருந்தும், அவரவர் விருப்பப்படி, பெண்கள், தங்களால் இயன்ற சீர்வரிசைகளை எடுத்து வருவார்கள். எல்லையில் உள்ள நாட்டாங்கல்லின் முன்பாக சீர்வரிசைகளை வைத்து வழிபடுவோம். ஆடி மாதம் கன்னி தெய்வங்களுக்கு உகந்த மாதம் என்பதால், கன்னி தெய்வங்களை போற்றும் வகையில், ஏழு பெண் குழந்தைகளை   தெய்வங்களாக பாவித்து, வழிபாட்டுக்கு அழைத்துச் செல்வோம். நாட்ராயன் கல்லுக்கு பூஜை செய்த பின், சீர் வரிசைகளுடன் இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வோம். அங்கு, பெருமாளை வழிபட்ட பின், மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் வழங்கப்படும் என்றனர். முன்னதாக, மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, தானியங்கள், இனிப்பு, வெற்றிலை, பாக்கு, பழம் என, பல்வேறு சீர்வரிசைகள் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டன. அபிஷேக பூஜைகளை தொடர்ந்து, வளையல் அலங்காரத்தில் பனப்பாளையம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar