திருப்போரூர் : கண்ணகப்பட்டு கங்கையம்மன் கோவில் கும்பாபஷேக விழா, பிப்.1 கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில், கங்கையம்மன் கோவில் புதியதாக அமைக்கப் பட்டு உள்ளது. இங்கு, திருப்பணி முடிந்து, பிப்.1 கும்பாபஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 9:00 மணிக்கு, கலச குடங்கள் ஊர்வல மாக எடுத்து செல்லப் பட்டு, கோபுர விமானத் தில் உள்ள கலசத்தில், புனித நீர் ஊற்றப் பட்டது. பன், அம்மனுக்கு மகா அபஷேகம், தீப ஆராதனை நடந்தது.