பதிவு செய்த நாள்
02
பிப்
2013
10:02
கள்ளக்குறிச்சி : உலக நன்மை மற்றும் மழை வேண்டி கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது. உலக நன்மை, மக்கள் நலன், மழை வேண்டி கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலில் மூன்று நாட்கள் மகா சண்டி ஹோமம் நடந்தது. துவக்க நாளான 30ம் தேதி வாஸ்து சாந்தி, சங்கல்பம், கலச ஆவாஹனம் மற்றும் மூல மந்திர ஜெபம் நடந்தது. இரண்டாம் நாள் 108 சங்கு ஸ்தாபனம், 108 சங்காபிஷேகமும், மாலை கால பைரவர் பூஜை, பாராயண ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. பிப்.1 காலை விக்னேஸ்வர பூஜை, மகா காளி, மகாலஷ்மி, மகா சரஸ்வதி மற்றும் பரிவார தேவதை, உபசார பூஜை, காயத்ரி மூல மந்திரத்துடன் 108 மங்கள திரவிய ஹோமம், கலசாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து நடந்த ஜோதிர்லிங்க பூஜையில் பக்தர்கள் ஜோதி ஏற்றி வழிபாட்டனர்.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.அம்பிகேஸ்வரன் தலைமையிலான குருக்கள் மகா சண்டி ஹோமத்தை நடத்தினர்.ஏற்பாட்டினை கோவில் தலைவர் வேலு, விஸ்வகர்ம கைவினைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்