சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூன்றாவது தை வெள்ளியை முன் னிட்டு பக்தர்கள் புற்று அமைத்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதையொட்டி மூலவருக்கு 17 வகையான அபிஷேகங்கள் செய்தும், வண்ண மலர்களால் அலங்கரித்தும், துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டது. ஆர்ய வைஸ்ய மகிளா சபாவினர் புற்று அமைத்து அம்மனை உருவாக்கி வழிபட்டனர். கன் னிகா சகஸ்கரநாம பூஜையும், நாகராஜன் மந்திரமும் செய்து குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் சபா தலை வர் வள்ளி, செயலர் சுபஷீ, பொருளாளர் ரேவதி மற்றும் ஆர்ய வைஸ்ய நிர்வா கிகள் பங்கேற்றனர்.