பதிவு செய்த நாள்
02
பிப்
2013
10:02
தர்மபுரி: தர்மபுரியில், விவேகானந்தா அறக்கட்டளை மற்றும் உதவும் உள்ளங்கள் சார்பாக விவேகானந்தர், 150ம் ஆண்டு ஜெயந்தி விழா, மஹாத்மா காந்தியின், 65 வது நினைவு தினம் மற்றும் சமூகசேவகர் வேணுகோபாலுக்கு பாராட்டு விழா நடந்தது.சுதந்திர போராட்ட தியாகி வடிவேல் தலைமை வகித்தார். உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம், ஸ்ரீவிவேகானந்தர் அறக்கட்டளை தலைவர் குருராவ், தர்மபுரி மாதர் சங்க தலைவர் சந்திரா ஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.அன்னை தெரசா பேரவை நிறுவனர் தாஸ் வரவேற்றார். சுந்தரராஜ அடிகளார் சிறப்புரை ஆற்றினார். சமூக சேவகர் வேணுகோபாலின் சேவையை பாராட்டி அவருக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.சுதா நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர், விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி, விஜயலட்சுமி, நாக சரஸ்வதி, செந்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாக அலுவலர் திவேல், டாக்டர்.குமுதா, அன்னை தெரஸா பேரவை துணைத்தலைவர் அர்த்தனாரி, பொருளாளர் ஹரிகிருஷ்ணன் உட்ட்ட பலர் கலந்து கொண்டனர்.