உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கருட, நாக பஞ்சமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2026 10:08
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கருட மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு மூலவர் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பழங்கள், கிழங்குகள், வஸ்திரம் உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக வைக்கப்பட்டது. பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அம்மி கல்லில் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். எலுமிச்சை, தேங்காய் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.