Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... கோயில் படிக்கட்டுகளில் உலா வந்த சிங்கக் கூட்டம்; அலறியடித்து ஓடிய பக்தர்கள் கோயில் படிக்கட்டுகளில் உலா வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடியில் புதிய வெள்ளி ரிஷப வாகனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடியில் புதிய வெள்ளி ரிஷப வாகனம்

பதிவு செய்த நாள்

07 அக்
2026
03:10

மயிலாடுதுறை: வதான்யேஸ்வரர் கோவில் புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை விழா மற்றும் வெள்ளோட்டம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது;


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் கோயிலில் அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் காவிரி துலா உற்சவத்தின் போது சாமி வீதிஉலா செல்வதற்காக புதிய வெள்ளி ரிஷப வாகனம் 45 கிலோ எடையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது.  புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை விழா மற்றும் வெள்ளோட்ட வீதி உலா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை, மேதா தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் செய்து, புனிதநீர் கொண்டு வெள்ளி ரிஷபத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீப ஆராதனை நடந்தது.


தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வெள்ளி ரிஷப வாகனத்திற்கு பிரதிஷ்டை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தருமபுரம் ஆதீனம், வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.  முன்னதாக கோயில் சன்னதிகளில் வழிபாடு செய்த குருமகா சன்னிதானம் கூறுகையில், ஐப்பசி மாதம் முதல் துலா உற்சவத்திற்கு புறப்பாடு செய்ய வேண்டும் என்ற சங்கல்பத்திலே, இதை முதலாவதாக இன்றைய நாள் வெள்ளோட்டம் செய்யப்படுகிறது. கடைமுழுக்கு விழாவிற்கு முன்பு ஞானாம்பிகைக்கும் சேர்த்து இந்த ஆண்டு 2 வெள்ளி ரிஷப வாகனங்கள் புறப்பாடாகும். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்குள் பஞ்ச மூர்த்திகளுக்கும் நாம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை அன்பர்கள் மூலமாக சிவாச்சாரியார் ஏற்பாடு செய்து வருகிறார். ஐப்பசி மாதம் துலா உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் எழுந்தருளும் பாக்கியத்தை பக்தர்கள் தரிசித்து அருள் பெற வேண்டும் என்றார். அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலசந்திர சிவாச்சாரியார், ராஜேஷ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில வெள்ளி ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிவகுருநாதன், முக்கிய பிரமுகர்கள் சிவலிங்கம், பாண்டுரங்கன், செந்தில்வேல், கவுன்சிலர் ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar