எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் சுவாமி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2026 10:08
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி விழா நடந்தது. விஷ்ணு பகவானின் வாகனமான கருட பகவான் அவதரித்த நாள் கருட பஞ்சமி. கருடனை வணங்கினால் நாக தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் தைரியம் மற்றும் பாதுகாப்பு தரும் என்பதை நம்பிக்கை. இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் இரவு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார்.