Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி விழா பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 அமராவதி தீப ஆரத்தி திருவிழா கொழுமத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
 அமராவதி தீப ஆரத்தி திருவிழா கொழுமத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
11:08

 உடுமலை: உடுமலை அமராவதி ஆற்றில் மழை வேண்டியும், நீர் வளம் பெருகவும், அமராவதி தீப ஆரத்தி திருவிழா இரு நாட்கள் நடந்தது.


உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. நடப்பாண்டு, பருவ மழைகள் பொய்த்து, அணை நீர்மட்டம் சரிந்துள்ளதோடு, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. மழை வேண்டியும், நீர் வளம், வேளாண் வளம் பெருகவும், அகில பாரத சன்யாசிகள் சங்கம் மற்றும் ஸ்ரீ தாண்டேஸ்வரர் தெய்வீக திருப்பணி மன்றம், காசிவிஸ்வநாதர் அறப்பணி மன்றம், கோட்டை மாரியம்மன் வழிபாட்டுக்குழு, கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில், மடத்துக்குளம் கொழுமம் அமராவதி ஆற்றில், அமராவதி தீப ஆரத்தி விழா, இரு நாட்கள் நடந்தன. அமராவதி ஆற்றில், இரு நாட்களும், முற்றோதல், வருண ஜெபம், அமராவதி அணைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அமராவதி தீப ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக, கொழுமம் அமராவதி ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனைமலை ஆர்ஷவித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர ராமானந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷ்வ லிங்க தம்பிரான் சுவாமிகள், திருமூர்த்திமலை குருமகான் ஸ்ரீ பரஞ்சோதியார் மற்றும் சன்யாசிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அமராவதி அன்னையை வணங்கியும், மழை வேண்டியும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆவணி மாதம் சிம்ம ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் நாளுடன் பிறந்தது.  இது பல முக்கியத்துவம் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கருட மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு மூலவர் வராகி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நேற்று புஷ்பயாகத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் கருட பஞ்சமி தினமான நேற்று திங்கள்கிழமை திருமலையின் மாட வீதிகளில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar