ஆவணி மாதப்பிறப்பு; பழநி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2026 11:08
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி கோயிலில் பராபவ ஆண்டு ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.