Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 21ல் ... உத்தரகோசமங்கை மங்கைப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் உத்தரகோசமங்கை மங்கைப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் செப்.,5ல் சதுர்த்தி விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் செப்.,5ல் சதுர்த்தி விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
11:08

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா செப்., 5 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பிள்ளையர்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருவிழா செப்., 5ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 8:30 மணிக்கு மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருவார். செப்., 6 முதல் தினமும் காலையில் விநாயகர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா வருகிறார். சதுர்த்தி விழாவை முன்னிட்டு தினமும் இரவு 8:30 மணிக்கு விநாயகர் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை வாகனங்களில் திருவீதி உலா வருவார். செப்., 10 அன்று மாலை 5:00 மணிக்கு கோயில் முன் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும்.

செப்., 13 ல் சதுர்த்தி தேரோட்டம் செப்., 13 அன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வார். அன்று மாலையில் தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4:30 மு தல் இரவு 10:00 மணி வரை மூலவரான விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். செப்., 14 அன்று காலை 11:00 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அதனை தொடர்ந்து விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படையலிட்டு வழிபடுவர்.

சதுர்த்தியன்று தமிழக அளவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா. கண்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar