வளர்பிறை அஷ்டமி; காலபைரவரை வழிபட நீண்ட நாள் கடன் நீங்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2026 10:08
அஷ்டமி திதி காலபைரவருக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. பைரவருக்கு பிடித்தமான செவ்வரளி மலர் சூட்டி, வடை மாலை சாற்றி வழிபடுதல் சிறப்பு.
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். சிவபெருமானின் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர் பைரவர்.. பைரவரை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது சிறப்பு. இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்தி ரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர். எல்லா வற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவமூர்த்தியை வளர்பிறை அஷ்டமியில் வழிபட வீண் விரயங்கள் குறையும். இன்று பைரவரை வழிபடுவோம்.. வறுமை நிலை மாறி குடும்பத்தில் சுபிட்சம் பெறுவோம்!