தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2026 06:08
தென்காசி: தென்காசி உலகம்மன் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி உலகம்மன், காசி விஸ்வநாதர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பக்குளம் வளாகத்தில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.