அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2026 03:08
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜன் பெருமான் ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜ பெருமான் ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.