உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2026 05:08
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடந்தது. கடந்த, 24ம் தேதி அங்குர ேஹாமத்துடன் விழா துவங்கியது. கடந்த 25ம் தேதி மகா கும்பஸ்தானம், யஜமான சங்கல்பம், சிறப்பு ேஹாமம் நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. 9:30 மணிக்கு ஹயக்ரீவருக்கு நவகலச விசேஷ திருமஞ்சனம் நடந்தது. அதன்பின், அனைத்து சுவாமிகளுக்கும் விசேஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.