நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது; விந்திய மலைக்கு வடக்கே பார்ஹஸ் பத்தியமான ரீதியாய் பராபவ வருஷ பலனில், தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கோவில்களின் சொத்துக்களை மீட்க நேரும்.
பஞ்சாங்கத்தின் 3ம் பக்கத்தின் கடைசி வரியில் மூணாறு ஊட்டி வால்பாறை கொடைக்கானல் குளிர் அதிகமாக இருக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில்(ம.பி) (உ.பி)ஓரிஸா, காத்மாண்டு அதிகமான மழையால் பாதிப்பு மற்றும் சீனா அருகில் உள்ள திபெத் மலையில் பனிமலை உருக நேரும் என்று கூறியுள்ளது. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.