பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை; பவித்ரோத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2026 11:08
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பவித்ரோத்ஸவ விழா நிறைவு நாளில் பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்தார்.
பரமக்குடியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் அருள் பாலிக்கிறார். இங்கு சித்திரைத் திருவிழா, ஆடி பிரம்மோற்ஸவம் உட்பட வருடம் முழுவதும் விழாக்கள் நடக்கிறது. இதன்படி ஒவ்வொரு விழாக்களிலும் ஏற்படும் ஒரு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரிகார உற்சவமாக பவித்ர உற்சவ விழா நடக்கிறது. நேற்று ஐந்தாவது நாள் நிறைவில் மாலை பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து தூப தீப ஆராதனைகள் நிறைவடைந்து பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.