Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா
எழுத்தின் அளவு:
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2026
03:08

சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நடந்தது.


7ம் நுாற்றாண்டில் பாண்டிய நாட்டில் சமண மதம் பரவி,அரசை வசப் படுத்தி சைவ சமயத்தை நலியச் செய்து நசுக்க முயன்ற போது சைவமும், நாடும், அரசும் நலம் பெற்று செழித்தோங்க வேண்டி திருஞானசம் பந்தர் மதுரைக்கு வந்தார். சமணர்களுடன் சொற்போர் நிகழ்த்தி மன்னரின் வெப்புநோய் நீங்க பாசுரம் பாடியும், சமணர்களை அனல்வாதத்தில் வென்றும், புனல்வாதம் புரிய வைகையாற்றில் விட்ட வாழ்க அந்தணர் எனும் திருப் பாசுர ஏடு மதுரையிலிருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது வரலாறு. இதனை நினைவூட்டும் வகையில் இங்கு ஆண்டு தோறும் ஆவணிப் பவுர்ணமியில் ஏடு எதிரேறிய விழா நடக்கும். நேற்று நடந்த விழாவில் விநாயகர், திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார் வைகையாற்றங் கரையில் எழுந்தருளினர். வரலாறு விளக்கப் பட்டு சிவனடியார்களால் பாசுரங்கள் பாடப் பட்டன. வறண்ட வைகையில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு ஏடானது சிறிய மரச்சப்பரத்தில் வைத்து ஆற்றில் விடப்பட்டது. இதன்பின் மலர்கள் துாவி பூஜைகள் செய்யப்பட்டு தீபா ராதனை நடந்தது. கரையில் உள்ள திருஞானசம்பந்தர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் இளமதி, ஆய்வர் சாவித்திரி, பரம்பரை அறங்காவலர் சேவுகன், அர்ச்சகர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 4ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை; மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு எரிசக்தி மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள வருடாந்திர சலாகட்ல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar