Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் ராகவேந்திரர் ... விழுப்புரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலை உபன்யாசம் விழுப்புரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
10:08

போடி: தென்காசியம்பதி என அழைக்கப்படும் போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.


போடியில் மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் காமராஜ் பஜாரில் அமைந்து உள்ளது. 51 அடி ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியும், அம்மனுக்கும், சிவனுக்கும் இடையில் மூலஸ்தானமாக வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அமைந்து உள்ளார். கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரம், அனுமன் ஜெயந்தி, பிரதோஷம், மார்கழி பூஜை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, மாதாந்திர பவுர்ணமி பூஜைகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி, சனி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டு உள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல பூஜை நடைபெற்றது. புனித நீரை யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்தனர். போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் பரம்பரை அரங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். ஹிந்து அற நிலையத்துறை துணை ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். நேற்று காலை கோபுர கலசங்களுக்கு அர்ச்சகர் விக்னேஷ் சிவம் முன்னிலையில் புனித நீர் ஊற்றினர். அதன் பின் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சிவன், தட்சணாமூர்த்தி, ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. திருக் கல்யாணம் நடந்தது.


விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் கைலாசநாதர் கோயில் ஆலோசகர் ஜெயப்பிரதீப், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, தொழிலதிபர் பரமசிவம், தேனி பிளைவுட்ஸ் உரிமையாளர் ராஜசேகரன், த.வெ.க. வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், போடி நகர செயலாளர் ஆண்டிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் புருஷோத்த மன், கோயில் முன்னாள் அர்ச்சகர் சோமாஸ் கந்த குருக்கள், தேவாரம் ஜமீன்தார் தங்கபாண்டியன், கர்ணா ஓட்டல் உரிமையாளர் கயிலை பொன் கலைச்செல்வன், சந்தியாஸ் மஹால் உரிமையாளர் சம்பத், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சங்கர், பொம்மி மெடிக்கல் உரிமையாளர் பச்சையப்பன், ஜெ.வி., டிரேடர்ஸ் உரிமையாளர் ஜீவானந்தம், ஐயப்ப பக்த சபை நிர்வாகிகள், ஜனனி நகை அடகு கடை உரிமையாளர் சந்தோஷ் குமார், வைரம் கன்ஸ்ட்ரக்சன் உரிமை யாளர் சந்திரசேகர், தாஸ் பாரடைஸ் உரிமையாளர் முருகதாஸ், எஸ்.ஆர். கடலை கடை ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரி உரிமையாளர் வாசு, அம்மு பர்னிச்சர் ஹோம் அப்ளையண்ட்ஸ் உரிமை யாளர் செல்வன், ஆலய ஸ்தபதி ஐயப்பன், ஆலய பஞ்சவர்ணம் ஓவியர் இராசிமணி, ஆர்.எ. ஆயில் ஸ்டோர் உரிமையாளர் ஆறுமுகம், முனீஸ் பிராய்லர்ஸ் உரிமையாளர் செல்வ கணபதி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar