கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பொதுவிருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 11:02
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பொதுவிருந்து நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுவிருந்து நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தள் பூஜையும், நண்பகலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதையடுத்து சுமார் 12 மணியளவில் சிறப்பு பொதுவிருந்து நடந்தது. இதில் திருநெல்வேலி மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை வகித்தார். கோவில்பட்டி நகராட்சி துணை சேர்மன் ராமர், அதிமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோவில்பட்டி ஆர்டிஓ கதிரேசன் கலந்து கொண்டு பொதுவிருந்தை துவக்கி வைத்தார். இதையடுத்து அனைத்துதரப்பினரும் பொதுவிருந்தில் கலந்து கொண்டு உணவருந்தினர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கலைவாணி கோவிந்தராஜன், கவுன்சிலர்கள் அருணாச்சலசாமி, இருளப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.