சின்னசேலம்: சின்னசேலம் கங்காதரீஸ்வரர் கோவிலில் தை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. சின்னசேலம் கங்காதரீஸ்வரர் கோவிலில் தை அஸ்டமியை முன்னிட்டு மூலவருக்கு 17 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் காலபைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் அதிக அளவில் பங்கேற்று மிளகு, தேங்காய், பூசணி ஆகியவற்றில் தீபம் ஏற்றி வழிபட்டனர். வேதவெங்கடேஷ் குருக்கள் பூஜைகள் செய்தார்.