மனத்தூய்மையும் உடல் தூய்மையும் அவசியமே. இருந்தாலும் ஒரு மனிதனை உயர்த்துவதில் உடல்தூய்மையைக் காட்டிலும் மனத்தூய்மையின் பங்களிப்பே மிக அதிகம். அதனால் தான், மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்றார் வள்ளுவர். மனத் தூய்மையே எல்லா அறத்தையும் செய்யும் நற்பலனை ஒருவனுக்குத் தந்துவிடும்.