* ஒருவர் பிறக்கும் போதும் இறக்கும் போதும் எதையும் கொண்டு வந்ததில்லை. எதையும் கொண்டு போவதில்லை. இதனை தினமும் நினைத்தால் நீங்கள் நல்லவரே. * அதிகமான பணம் சேர்ப்பதை விட நல்ல பெயர் எடுப்பது சிறந்தது. * உங்கள் விரோதிக்கும் நன்மை செய்யுங்கள். * தலைவனாக இருக்க விரும்புகிறவர் முதலில் ஊழியராக சேவை செய்ய வேண்டும் * ஒரு செயலுக்காக கவலைப்படுவதின் மூலம் அது ஒரு முழமேனும் உயர்ந்து விடாது. * நன்மை செய்வதில் ஆர்வமாய் இருந்தால் உங்களை தீமை அண்டாது. * பொல்லாதவர்களை குறித்து எரிச்சல் அடையாதீர். நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதீர். அவர்கள் புல்லை போல சீக்கிரத்தில் அறுப்புண்டு வாடுவர். * சொல்லிலும் செயலிலும் சேதாரம் ஏற்படாமல் நடப்பவனே பாக்கியவான். * விண்ணரசில் நுழைய செல்வம் அவசியம் இல்லாத ஒன்று.