கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் எழுந்தருளியுள்ள அம்மன் கோவில்களில், ஆவணி அமாவாசையை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதில், கோத்தகிரி பஜார் அருள்மிகு மாரியம்மன் கோவில் மற்றும் டானிங்டன் அருள்மிகு கருமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை முதல் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.