Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் விநாயகர் ... விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருவலஞ்சுழி கோவிலில் தேரோட்டம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
80 ஆயிரம் வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த 32 அடி உயர விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
80 ஆயிரம் வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த 32 அடி உயர விநாயகர்

பதிவு செய்த நாள்

14 செப்
2026
11:09

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் ஆன உயரமான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி  விநாயகரை சுற்றி 80 ஆயிரம் வண்ண வண்ண  பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.


இந்தியா முழுவதும்  விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் ஸ்ரீ  நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை இங்கு மட்டுமே உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு நேற்று  13.09.26 மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து கோவில் வளாகம்  முழுவதும் காஷ்மீரில் விளையக்கூடிய  செங்காந்தல் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 80ஆயிரம் மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா, ரோஸ், வாடாமல்லி என பல வண்ண கலர்களால் ஆன கிஷாந்த் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் வண்ண வண்ண கலர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூந்தோட்டத்தின்  நடுவே விநாயகர் வீற்றிருப்பது மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.


அதேபோல் 1,1/2 அடி உயரத்தில் உள்ள வல்லப கணபதி, சங்கடகர சதுர்த்தி விநாயகர், நன்மை தரும் விநாயகர், கற்பக விநாயகர், வாயு கணபதி என 108 விநாயகர்  அலங்கரிக்கப்பட்டு பூந்தோட்டத்தில் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும்  மின் ஒளியில் ஜொலி ஜொலித்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகரை  தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar