Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிதிருவரங்கம் கோவிலில் புரட்டாசி ...  சிதம்பரத்தில் ராஜராஜசோழன் திருமேனியுடன் திருமுறை வீதியுலா  சிதம்பரத்தில் ராஜராஜசோழன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜலட்சுமி விரதம்: லட்சுமி தேவியை வணங்கி முப்பெரும் செல்வங்களையும் பெறுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கஜலட்சுமி விரதம்: லட்சுமி தேவியை வணங்கி முப்பெரும் செல்வங்களையும் பெறுவோம்!

பதிவு செய்த நாள்

21 செப்
2026
10:09

திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும் திசை யானைகள் எட்டும், எண் திசையிலிருந்தும் பொற்குடங்களில் தூய நீரை ஏந்தி வந்து நீராட்டின என்கிறது விஷ்ணு புராணம். இங்ஙனம், யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால், இவளை கஜலட்சுமி என்று அழைக்கின்றனர். 


கஜலட்சுமியை விளக்கில் நிலைப்படுத்தி வணங்குவது, நெடுங்கால வழக்கம். விளக்கில் திருவாசிக்கு (பிரபைக்கு) நடுவே கஜலட்சுமி வடிவத்தை அமைக்கின்றனர். இவளைச் சாந்த லட்சுமி, தயா லட்சுமி, சுதந்திர லட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர். சங்க இலக்கியங்களில் கஜலட்சுமியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பழங்காசுகளில் அவள் கஜலட்சுமியாகப் பொறிக்கப்பட்டுள்ளாள். வடநாட்டில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகளில், மேற்கரங்களில் சங்கு, பறவை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறாள் கஜலட்சுமி. யானைகள் சங்கின் மீதும் பறவையின் மீதும் நீரைப் பொழிகின்றன. தென்னிந்தியாவில் உள்ள பல கோயில்களில் லட்சுமியின் மேற்கரங்களில் உள்ள தாமரை மலர்களில் கிளிகள் வீற்றிருப்பதைக் காண்கிறோம். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜ பூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகினறனர். கஜலட்சுமி திருவடிவை வீட்டின் நிலைப்படிகளிலும் அமைப்பார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, அந்த இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் செல்வவளத்தையும் பெருகச்செய்வாள் திருமகள். தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது. இன்று வீட்டில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வழிபட தோஷங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar