Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வடலுார் சத்திய ஞான சபையில் ... தென் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: தேரில் மலையப்ப சுவாமி வலம் தென் திருப்பதியில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம் முழுதும் 36,000 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகம் முழுதும் 36,000 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

பதிவு செய்த நாள்

21 செப்
2026
10:09

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகத்தில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 36,000 சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.


விநாயகர் சதுர்த்தி தினமான, செப்., 14ம் தேதி ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சென்னையில், 1,562 விநாயகர் சிலைகள்; கோவையில், 2,230; விழுப்புரத்தில், 1,780; திருவள்ளூரில், 892; செங்கல்பட்டில் 628; காஞ்சிபுரத்தில், 252 என, மாநிலம் முழுதும், 36,000க்கும் அதிகமான சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகளை விசர்ஜனம் செய்ய, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இடங்கள் அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன. அதேபோல, விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் வழியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


நேற்று காலை முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகளுடன், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நீர் நிலைகளில் கரைத்தனர். சென்னையில் பட்டினப்பாக்கம் கடல் உட்பட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள், கிரேன் உதவியுடன் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன. அத்துடன், நகரப்பகுதிகளில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும், பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளையும், பெரிய விநாயகர் சிலைகளுடன் எடுத்துச் சென்றனர். சிலர் தனிப்பட்ட முறையில், சிலைகளை எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar