வடலுார் சத்திய ஞான சபையில் சன்மார்க்கர்கள் உழவாரப்பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2026 10:09
வடலுார் : வடலுார் சத்திய ஞான சபையில் சன்மார்க்கர்கள் சார்பில் உழவாரப் பணி நடந்தது
வடலுார் சன்மார்க்க சேவை மையம் சார்பில், சத்திய ஞான சபை அருகே உழவாரப்பணி நடந்தது. இதில் அந்த மையத்தின் சார்பில், 25 சன்மார்க்கர்கள் கலந்து கொண்டு சத்திய ஞான சபை சுற்றி அமைந்துள்ள பூங்கா பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சன்மார்க்க சேவை மையத்தின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது, கடந்த, 18 ஆண்டுகளாக சன்மார்க்க சேவை மையம் சார்பில், சன்மார்க்க தொண்டுகளை தொடர்ந்து செய்து வருகிறோம். வடலுாரில் தைப்பூசம், மாத பூசம் நடைபெறும் நாட்களில் இங்கு சன்மார்க்க அன்பர்களுக்கு பல்வேறு தொண்டுகள் செய்து வருகிறோம். தற்போது இரண்டு வாரங்களாக உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.