Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் ஏகாதசி, திருவோண ... காரமடை கோவிலில் ரூ.24 லட்சம் பக்தர்கள் உண்டியல் காணிக்கை காரமடை கோவிலில் ரூ.24 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் பிரசாதங்களின் வகைகள் குறைப்பால் பக்தர்கள் அதிருப்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் பிரசாதங்களின் வகைகள் குறைப்பால் பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

22 செப்
2026
04:09

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பிரசாத வகைகள் குறைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் முடிந்ததும், மலைக்கோவில் தேர் வீதியில் உள்ள கோவில் பிரசாதம் விற்பனை நிலையத்தில் விற்கப்பட்டு வந்த, புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, மிளகு வடை, தேன்குழல், முறுக்கு, பேரீச்சம்பழம் மற்றும் கற்கண்டு போன்றவற்றை, தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுப்பதற்கு வாங்கிச் செல்வது வழக்கம்.


கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் வரை, கோவில் நிர்வாகத்தால் பிரசாத கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, பிரசாத பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், தனியார் நபரின் ஒப்பந்த காலம் முடிந்ததால், கோவில் நிர்வாகமே பிரசாத கடையை தற்போது நடத்தி வருகிறது. தற்போது, பக்தர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஆகிய இரு பிரசாதங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிரசாதங்களும், இலைகள் அல்லது நார் பொருட்களால் செய்யப்படும் இயற்கை உணவுக்கலனான தொன்னையில் வைத்து கொடுப்பதால், பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை. மேலும், மீதமுள்ள லட்டு, மிளகு வடை, தேன்குழல், முறுக்கு போன்ற பிரசாதங்களை கோவில் நிர்வாகம் விற்பனை செய்யாததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த அனைத்து பிரசாதங்களையும், மீண்டும் விற்பனை செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கூறியதாவது: தற்போது புளியோதரை, சர்க்கரை பொங்கல் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பிரசாதங்களை தயாரிக்க வசதியாக, தயாரிப்பு கூடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், வழக்கம் போல் மேற்கண்ட அனைத்து பிரசாதங்களும் விற்பன செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar