Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்சி மாறினாலும் மாறாத ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

23 செப்
2026
11:09

திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தயார்களுடன்  பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம் கற்பக விருட்சம், கருடன், அனுமந்தன் உள்ளிட்ட   பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 


பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் வளாகத்தில் மலையப்ப சுவாமி  ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட முலிகை திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதில் தெப்பக்குளத்தை சுற்றியிருந்த அயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

 

கொடி இறக்கம்: ஒன்பது நாட்கள் சுவாமிக்கு நடைபெற்ற வாகன சேவையைக்காண  ரீஷிகள், தேவதைகளுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஏற்றப்பட்ட கருடக்கொடி பிரம்மோற்சவம் நிறைவு காரணமாக  மாலை ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் இருந்து  கொடி இறக்கப்படுகிறது. 


நவராத்திரி பிரம்மோற்சவம்: மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெலுங்கில் நட்சத்திர திதி அடிப்படையில் அதிக மாதங்கள் வரும் போது அந்த ஆண்டில் மட்டும் இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில்  சூர்யனை மையமாக கொண்டும் , ஆந்திராவில் சந்திரனை மையமாக கொண்டு பஞ்சாங்கம் எழுதப்படுவதும்  கடைப்பிடிப்பது வழக்கம். இதில் மாதங்களில் செளரமானம் அடிப்படையாகவும், சந்திரமானம் அடிப்படையாகவும் கொண்டு கணக்கிடப்படுகிறது. தெலுங்கு பஞ்சாங்கம் சந்திரமான அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளதால், அமாவாசை முடிந்த மறுநாள் மாத பிறப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கிடப்படும் போது ஓர் ஆண்டிற்கு கூடுதலாக, 11 நாட்கள் வரும். அது இரண்டு  ஆண்டுகளுக்கு  ஒருமுறை 21 நாட்களாக மாறும் போது ஒரு மாதம் கூடுதலாகிறது. ஆனால் 11 மாதங்களுக்கு ஒருமுறை பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகமவிதி உள்ளதால், கூடுதலாக மாதம் வரும் ஆண்டுகளில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சந்திர நாட்காட்டியின்படி   புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நிறைவு பெறும் விதமாக  வருடாந்திர பிரம்மோற்சவமாகவும், தசரா நவராத்திரிகளில்  நடைபெறுவது நவராத்திரி பிரம்மோற்சவமாக நடத்தப்படுகின்றன. இந்த இரண்டு பிரம்மோற்சவங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவங்களில் கொடியேற்றம் அல்லது கொடியேற்றம் இறக்கம் இருக்காது.  அவ்வாறு இந்த ஆண்டு வருடாந்திர  பிரம்மோற்சவம் செப்டம்பர் 15 தொடங்கி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவியுடன் நிறைவு பெற்றது.  நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரையிலும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar