Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர ... தென்திருப்பதியில் சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம்; பிரம்மோற்சவம் நிறைவு தென்திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவளவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பவளவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

23 செப்
2026
05:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவிலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. ஒரு ஆண்டைக் கடந்தும், இதுவரை 60 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்துவதோடு, விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து கோவில் திருப்பணிகள் செயல் அலுவலர் பூவழகி கூறியதாவது: பவளவண்ணர் கோவிலில் 1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம், மூலவர் சன்னிதி மற்றும் சுற்றுப்பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்தவுடன், உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த ஆண்டு ஜன. மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar