Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் அடுத்தடுத்து ... பொள்ளாச்சி நாகத்தம்மன் கோவிலில்  2ம் ஆண்டு விழா பொள்ளாச்சி நாகத்தம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

24 செப்
2026
03:09

ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் இன்று  24ம் தேதி துவங்கியது. இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது, ஆகம ​​சாஸ்திரங்களின் படி சிறப்பு பூஜைகள் நடைபெறும். வழக்கமாக கோயிலில் செய்யப்படும் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக, தெரிந்தும் தெரியாமலும் செய்யப்படும் தவறுகளை  திருத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. 


விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து (ஸ்ரீ )- சிலந்தி (காள ) பாம்பு (ஹஸ்தி ) யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் குங்குமம் சந்தனம் இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாலை கோயிலில் இருந்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே.சாய் பிரசாத், கோயில் செயல் அலுவலர் பி.கே. வெங்கடேஸ்வர்லு செயல் அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar