சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் புரட்டாசி கோ பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2026 11:09
சின்னசேலம்: சின்னசேலம் கடைவீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் புரட்டாசி 2வது வெள்ளியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. அதனையொட்டி, கோவில் முன் கன்றுடன் பசுவுக்கு மகிளா விவாக் மற்றும் வாசவி வனிதா குழுவினர் அலங்கரித்து வழிபட்டனர். குமார் சர்மா மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். முன்னதாக மூலவர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆர்ய வைசிய மக்கள் பங்கேற்றனர்.