Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ... ஏனாத்துார் காஞ்சி சங்கர மடத்திற்கு புதிய யானை ‘பிஜிலி’ வந்தது ஏனாத்துார் காஞ்சி சங்கர மடத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று பவுர்ணமி, உமாமகேஸ்வர விரதம்: ஈசனை வழிபட பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று பவுர்ணமி, உமாமகேஸ்வர விரதம்: ஈசனை வழிபட பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்!

பதிவு செய்த நாள்

26 செப்
2026
12:09

சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருக்கும் பவுர்ணமி தினம் வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாளாகும். பரிபூரணமாகப் பிரகாசிக்கும் சந்திரனின் ஒளியில் கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். எங்கும் நிறைந்த சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமா மகேஸ்வர விரதம். திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். 


சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். மகாலட்சுமியை பிரிந்த திருமால் இந்த உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் மகாலட்சுமியை அடைந்தார் என்கிறது புராணம். 16 முடிச்சு உள்ள சிவப்பு நிற நோன்பு கயிற்றை பூஜையில் வைத்து சிவ சக்தியை வழிபட்டு கையில் கட்டிக் கொள்வது சிறப்பு.. வீட்டில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உமாமகேஸ்வர வழிபட கருத்து வேறுபாடுகள் நீங்கி சர்வ மங்களங்களும் உண்டாக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar