ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2026 12:09
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பள்ளிகளுக்கு காலாண்டு தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமை யொட்டி ஸ்ரீரங்கத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் வருகையும், பாதுகாப்பையும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.