Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் திருநாமம் துன்பங்களைத் துரத்தும்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அருளுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாள் திருநாமம் துன்பங்களைத் துரத்தும்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அருளுரை

பதிவு செய்த நாள்

27 செப்
2026
01:09

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில், ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் 108 திருநாமங்கள் குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் பேசியதாவது:

கடலில் இருந்து பிறந்ததால் மகாலட்சுமிக்கு அப்தி கன்யா, சிந்து கன்யா, அலைமகள் போன்ற பெயர்கள் உள்ளன. கலைமகள் என்பது சரஸ்வதி தேவியையும், மலைமகள் என்பது பார்வதி தேவியையும், அலைமகள் என்பது மகாலட்சுமியையும் குறிக்கும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது குதிரை, யானை, அமுதம், ஆலகால விஷம், அப்சரஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் உயிர்களும் தோன்றின. இறுதியாக மகாலட்சுமி அவதரித்தார். பாற்கடலில் இருந்து வெளிவந்த மகாலட்சுமி, தனது கையில் மாலையை எடுத்துக்கொண்டு எம்பெருமானின் திருமார்பில் அணிவித்து, அவரை தனது நாயகனாக ஏற்றுக்கொண்டார்.

மகாலட்சுமி எம்பெருமானின் திருமார்பில் ஏறி அமர்ந்த நிகழ்வே லட்சுமி கல்யாணம் எனப்படுகிறது. திருமகளை தனது திருமார்பில் தாங்கி நிற்பதால் பெருமாளை ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தில் அழைக்கிறோம்.

பராசர பட்டர் தனது உபன்யாசத்தில், இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் பெண்களே என்றும், ஒரே பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனே புருஷோத்தமன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜீவாத்மாக்கள் பரமாத்மாவுடன் வைகுந்தத்தில் சென்று கலப்பதே உண்மையானதும், நித்தியமானதுமான பெரிய விவாகம் என அவர் விளக்கியுள்ளார்.

143 பாசுரம் ஆழ்வார்கள் 12 பேரில் 11 பேர் ஆண்கள். அவர்கள் தங்களை நாயகியாக பாவித்துக்கொண்டு இறைவனை நோக்கி பாடினர். ஆனால் ஆண்டாள் மட்டும் மெய்யாகவே பெண்ணாகப் பிறந்து பெருமாள் மீது 143 பாசுரங்களை பாடியுள்ளார். திருப்பாவையில் எம்பெருமான் மீதான தனது பக்தியையும், அவரை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையையும் ஆண்டாள் வெளிப்படுத்தியுள்ளார்.

வேங்கடம் என்றால் பாவங்களை எரித்தல் என்று பொருள். திருமலையில் சிறிது நேரம் தங்கினாலே நமது பாவங்கள் விலகும். அறியாமல் செய்யப்படும் எதிர்கால பாவங்களும் நசிந்து போகும். கோவிந்தா, மாதவா, வேங்கடவா உள்ளிட்ட பெருமாளின் திருநாமங்களைச் சொல்வது பக்தர்களை பாவங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும்.

இவ்வாறு, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar