விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2026 12:09
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அதன்பின், காலை 10:00 மணியளவில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், பெரியார்நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், முகாசபரூர் வரத ராஜ பெருமாள் கோவில், காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திரும ஞ்சனம் நடந்தது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.