விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரஹாரம் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது.
தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமை தாங்கினார். வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா மற்றும் முருகா மருத்துவமனை டாக்டர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினர்.
இதில், வாழும் கலை, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, நேர்மறையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல், ஞான விளக்கம் உள்ளிட்ட பல்வேறு தியான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஏராரளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இங்கு தினந்தோறும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை இலவச தியான பயிற்சி கற்றுத்தரப்படுவதாக நிர்வாகி செல்வமுத்துகுமரன் கூறினார்.