கமுதி: கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயிலில், விநாயகர், மூலவர் முனியப்பசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேகம், புரட்டாசி பொங்கல் விழா, குதிரை எடுப்பு விழா நடந்தது.
நேற்று (செப்.27) கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அக்னி சட்டி, பால்குடம், அலகுவேல் குத்தி பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அரியநாச்சி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பொங்கல் வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வண்ணாங்குளம், குண்டுகுளம், வேப்பங்குளம் பக்தர்கள் பங்கேற்றனர்.