திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர் தேர் சுத்தம் செய்யும் பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2026 04:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நடைபெறும் தேர்த்திருவிழாவில் விநாயகர் வீதி உலா வரும் தேர் புதுப்பிக்கும் பணிக்காக தீயணைப்புத் துறை மூலம் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர். கடந்த செப் 17 ம்தேதி தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் தொடங்க முகூர்த்த பந்தகால் நடப்பட்டது குறிபடத்தக்கது.