சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் புரட்டாசி கிருத்திகை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2026 10:10
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா நடந்தது.
சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடர்ந்து பால் அபிஷேகமும், கால சந்தி பூஜையும், நடந்தது. பின்பு, 10:00 மணிக்கு திம்மராயம்பாளையம் மகா மாரியம்மன் பஜனை குழுவினரின், நாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியருக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டுக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.