கிருமாம்பாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி திருமஞ்சனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 11:10
பாகூர்: கிருமாம்பாக்கம் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. மோகன்தாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (3ம் தேதி) காலை 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா, மதியம் 12:00 மணிக்கு பள்ளியறையில் எழுதல் நிகழ்வு நடக்கிறது.