திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 11:10
நத்தம்: தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுருசாமி மடம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே தோணிமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.